செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள பாடசாலைகள் தயாராகவில்லை; அரசாங்கத்தின் வழிகாட்டலை கோரல்

செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள பாடசாலைகள் தயாராகவில்லை; அரசாங்கத்தின் வழிகாட்டலை கோரல்

1 minutes read

பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் செயற்கை நுண்ணறிவை (AI) பாதுகாப்பாகவும் வினைத்திறனாகவும் கையாள்வது தொடர்பான அரசாங்கத்தின் வழிகாட்டல்களைக் கல்வி நிலையங்கள் அவசரமாக எதிர்பார்த்துக் காத்திருப்பதாக புதிய அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும், அதன் அறிமுக நடைமுறைகள் குழப்பகரமான நிலையிலேயே காணப்படுவதாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த நூலாசிரியரும் முன்னாள் அதிபருமான சேர் அந்தனி செல்டன் தெரிவித்துள்ளார்.

துணிகர மூலதன முதலீட்டாளர் டிம் பண்டிங்குடன் இணைந்து சேர் அந்தனி செல்டன் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், செயற்கை நுண்ணறிவின் துரித வருகையை எதிர்கொள்வதற்குப் பாடசாலைகள் முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவை நடைமுறைப்படுத்துவதற்கான தேசியக் கட்டமைப்பொன்றை அரசாங்கம் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் எனவும், ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் பாடசாலைகள் தமக்கான சொந்த செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை வகுக்க வழிவகை செய்யப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

போர்க்காலங்கள் மற்றும் தொற்றுநோய் பரவல் போன்ற தேசிய அவசர நிலைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவத்தை செயற்கை நுண்ணறிவு விவகாரத்துக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தும் இந்த அறிக்கை, கொவிட் தடுப்பூசி விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட விசேட செயலணியைப் போன்று கல்வித்துறைக்கான செயலணியொன்றை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், கல்வி முறையை நிஜ உலக செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுடன் இணைப்பதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையொன்றை நிகழ்த்த வேண்டும், ஆப்காட் ஆய்வுகளின் போது பாடசாலைகளின் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டும், மற்றும் பரீட்சைகளுடன் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொடர்ச்சியான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.