செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் விமானப்படை தளத்திற்கு அருகில் வெடிபொருட்கள் மீட்பு: பலர் கைது, மக்கள் அவசரமாக வெளியேற்றம்

விமானப்படை தளத்திற்கு அருகில் வெடிபொருட்கள் மீட்பு: பலர் கைது, மக்கள் அவசரமாக வெளியேற்றம்

1 minutes read

இங்கிலாந்தின் குளோஸ்டர்ஷயர் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை பயன்படுத்தும் ஆர்.ஏ.எப் பெயர்போர்ட் விமானப்படை தளத்துக்கு அருகாமையில் பாரிய அசம்பாவித நிலைமை ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானப்படை தளத்துக்கு அருகிலுள்ள வெல்போர்ட் கிராமத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள பொழுதுபோக்கு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக குளோஸ்டர்ஷயர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அப்பகுதிக்கான பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு இங்கிலாந்து இராணுவத்தின் விசேட வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட பல வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அபாயகரமான பகுதி பதிலளிப்பு குழுவினர், ஆயுதம் தாங்கிய பொலிஸார், அவசர அம்பியூலன்ஸ் சேவைகள் மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பாரிய அளவிலான அவசர சேவை பிரிவினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நம்புவதாகவும், தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் குளோஸ்டர்ஷயர் பொலிஸார் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நிலைகொண்டுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.