வட ஆப்பிரிக்கா – மொரோக்கோ வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர், அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர்ப்புற திட்டமிடல் துறை அமைச்சரான பாத்திமா சஹ்ரா மன்சூரியை புதிய பிரதமராக மொரோக்கோ மன்னர் ஆறாம் மொஹமட் உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
மராகேஷ் மாநகர மேயராகவும் பதவி வகித்து வந்த மன்சூரிக்கு புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் பணிப்புரை விடுத்துள்ளதாக அந்நாட்டு அரச மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தேர்தலில் மன்சூரி தலைமையிலான மையவாதக் கட்சியான ‘அத்தென்டிசிட்டி அண்ட் மொடர்னிட்டி கட்சி’ அதிக வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.