செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய விளையாட்டு விழா அணிக்கு எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்

ஆசிய விளையாட்டு விழா அணிக்கு எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்

1 minutes read

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு  விழாவில் இன்று வியாழக்கிழமை (01) ஆரம்பமான    அணிக்கு  எழுவர் றக்பியில் (Rugby Sevens) சி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டிகளில் மிக இலகுவான வெற்றிகளை ஈட்டி கால் இறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

பிலிப்பைன்ஸுக்கு எதிராக நேற்றுக் காலை நடைபெற்ற போட்டியில் 22 – 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றபெற்றது.

 

 

 

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா 7 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன.

எனினும் இடைவேளைக்குப் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை மேலும் 15 புள்ளிக்ளைப் பெற்று வெற்றியை உறுதிசெய்துகொண்டது.

இலங்கை சார்பாக சத்துர விதானலாகே 2 ட்ரைகளையும் அநுராத ரன்கொத்கெதர, ஜனிந்து பலகே ஆகியோர் தலா ட்ரையையும் வைத்தனர். ஒரு ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை அநுராத பெற்றுக்கொடுத்தார்.

 

 

தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற சிங்கப்பூருடனான போட்டியில் இலங்கை 33 – 17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிபெற்றது. இடைவேளையின்போது சிங்கப்பூர் 12 – 7 என முன்னிலையில் இருந்ததால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால், இடைவேளைக்குப் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய இலங்கை மேலும் 26 புள்ளிகளைப் பெற்றது.

இல்ஙகை சார்பாக ஆக்காஷ் ரவிசிங்க 2 ட்ரைகளையும் சத்துர வித்தானலாகே, பசிந்து விஜேசுந்தர, தேவிந்த லன்சாகர ஆகியோர் தலா ஒரு ட்ரையையும் வைத்தனர்.

ஷாஹித் இப்ராஹிம், அநுராத ரன்கொத்கெதர ஆகிய இருவரும் தலா 2 கொன்வேர்ஷன்ளை இலக்கு தவறாமல் கோல்காப்புகளுக்கு மேலாக உதைத்தனர்.

இக் குழுவில் ஒரு வெற்றி, ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தை இலங்கை நாளை சந்திக்கவுள்ளது.

கோல்வ் விளையாட்டில் இலங்கை வீரர்கள் சரிவு

கசுகாய் கன்ட்றி க்ளப் ஈஸ்ட் புல்தரையில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற தனிநபர் மற்றும் அணிநிலை கோல்வ் போட்டிகளில் இலங்கை தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கிறது.

இரண்டாம் நாள் போட்டிகள் முடிவில் இலங்கையின் மிதுன் பெரேரா 144 நகர்வுகளுடன் இணை 34ஆவது இடத்திலும் நடராஜா தங்கராஜா 148 நகர்வுகளுடன் இணை 41ஆவது இடத்திலும் கணேஸ்குமார் தனுசன் 155 நகர்வுகளுடன் 49ஆவது இடத்திலும் உள்ளனர்.

அணி நிலையில் 292 நகர்வுகளுடன் இலங்கை 15ஆவது இடத்தில் இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.