செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் கிளாஸ்கோ மதுபானசாலையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

கிளாஸ்கோ மதுபானசாலையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

1 minutes read

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow)) நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, 40 இக்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக ஸ்கொட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 09 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட காட்சிகளின்படி, ரென்பீல்ட் வீதி மற்றும் வெஸ்ட் ரீஜண்ட் வீதியின் ஒரு பகுதி பாதுகாப்பு கருதி உடனடியாக முடக்கப்பட்டதுடன், பிஸ்ட்ரோ மற்றும் மால்ட்மேன் மதுபானசாலைகளுக்கு வெளியே பல தீயணைப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தீயணைப்புப் படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஸ்கொட்லாந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.