செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

1 minutes read

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திர நடிகை ஊர்வசி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆஷா’ எனும் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் இன்று (16) வெள்ளிக்கிழமை முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கலாச்சாரம் காண்

இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆஷா’ திரைப்படத்தில் ஊர்வசி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் ,விஜயராகவன், லட்சுமிமேனன், பாக்யலட்சுமி உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சைக்காலஜிக்கல் திரில்லராக உருவான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரித்திருக்கிறார். பட மாளிகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் தற்போது ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

ஒரு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது ஒரு புறம் இதன் பின்னணியில் ஏற்பட்ட பட்டாம்பூச்சி விளைவு எனப்படும் பட்டர்ஃபிளை எபெக்ட் மறுபுறம் என எளிதில் பார்வையாளர்களால் அவதானிக்க இயலாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், இதற்கு டிஜிட்டல் தளத்திலும் பாரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன் பிள்ளைகளை பாதுகாக்க ஒரு தாயின் எல்லை கடந்த உணர்வு ரீதியான உளவியல் போராட்டத்தை உரக்க விவரிக்கும் இந்த ஆஷா திரைப்படம், டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் வரவேற்பை பெறும் என அவதானிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.