செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு

தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு

1 minutes read

தென்னிந்தியாவின் லேடி சுப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் – தீபாவளி திருநாளை முன்னிட்டு படமாளிகையில் வெளியாகிறது என படக் குழுவினர் பிரத்யேக போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இயக்குநர் சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் யோகி பாபு, நயன்தாரா, அபிநயா, ரெஜினா கசாண்ட்ரா, அஜய் கோஷ், இனியா, மைனா நந்தினி, கருடா ராம், வெங்கட் ராகவன், நிதின் சத்யா, சிங்கம் புலி, சுனில், ஊர்வசி, துனியா விஜய், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். மிதலாஜிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.‌

இப்படத்தின் அறிமுக காணொளி- பாடல் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில் இத் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இப்படக்குழு பிரத்யேக டீசரையும், திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் தீபாவளி திருநாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சூர்யாவின் ‘சீன்’, ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’, விஜய் அண்டனியின் ‘அப்பா குட்டி’ ஆகிய படங்கள் வெளியீட்டை உறுதி செய்திருக்கும் நிலையில்… தற்போது நயன்தாரா நடித்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி அற்புதமான திரை விருந்தாக இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.