செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உயர்மட்டக் கலந்துரையாடல்

0 minutes read

அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான லெப்டினன்ட் கேணல் ஷும்பேய் புஜிமுரா உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் குழுவினர், மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அதன் தளபதியான ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவை  சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு நேற்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

நேற்று  இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின்போது, விண்வெளி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் விண்வெளித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

மேலும், இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.