செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மேகனின் தந்தைக்கு எதிராகச் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு! கவலையில் மேகன்

மேகனின் தந்தைக்கு எதிராகச் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு! கவலையில் மேகன்

1 minutes read

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்க்கலின் தந்தையான தாமஸ் மார்க்கல், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பீன்ஸில் அவர் முன்னர் தங்கியிருந்த வீடொன்றில் இருந்து குறித்த புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேகன் மார்க்கலின் ஒன்றுவிட்ட சகோதரர் அந்தப் படங்களை அவதானித்த பின்னர், அது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நீண்ட காலமாகத் தனது தந்தையுடன் எவ்வித தொடர்புகளையும் பேணாத நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுகள் தமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக மேகன் மார்க்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சிறார்கள் குறித்து தாம் ஆழ்ந்த கவலை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் தமது தந்தை மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்ததாகவும், அதன் காரணமாகவே தமது பிள்ளைகள் அவருடன் தொடர்புகொள்வதைத் தாம் தடுத்ததாகவும் மேகன் கூறியுள்ளார்.

இதேவேளை, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை எனக் கூறி தாமஸ் மார்க்கல் அவற்றை முற்றாக மறுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.