நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை முன்னிட்டு, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் இந்த 60 அடி உயர கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நயன்தாராவுக்கு அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கட் அவுட் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.