செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026

1 minutes read

2026 நவம்பர் 5 முதல் 8 ஆம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இப்புகழ்பெற்ற சர்வதேச கராத்தேப் போட்டிக்கான உத்தியோகபூர்வ நடுவர் குழுவில், பிரதம கராத்தே பயிற்றுவிப்பாளரும் நடுவருமான ஷிஹான் அன்ரோ டினேஷ் தேவசகாயம் இடம்பெற்றுள்ளார்.

இந்த சர்வதேச  கராத்தே சுற்றுப்போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளன. நவம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறும் எலைட் (Elite) போட்டிப் பிரிவு அந்தந்த நாடுகளின் தேசிய கராத்தே சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் தேசிய அணிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டிகளிற்கு உலக கராத்தே சம்மேளனம் (WKF)  அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கழகப் போட்டிப்பிரிவுகளில் (Club Competition), அந்தந்த நாடுகளின் தேசிய கராத்தே சம்மேளனங்களுடன் இணைக்கப்பட்ட கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகள் பங்குபெற்றுவர்.

அன்ரோ டினேஷ்,  கராத்தே துறையில் விரிவான அனுபவத்தையும், தொழில்முறை தகைமைகளையும் கொண்டுள்ளார். ஸ்ரீலங்காவின் காட்டா மத்தியஸ்தராகவும், குமித்தே நடுவராகவும் தேசிய A தரத் தகைமைகளைப் பெற்றுள்ளதுடன், ஆசிய கராத்தே சம்மேளனத்தின் (AKF) மத்தியஸ்தர் B தரத்தினையும் பெற்றுள்ளார். தற்போது அயர்லாந்தின் தேசிய கராத்தே சம்மேளனமான ONAKAI இன் கீழ் நடுவராகவும் பணியாற்றி வருகின்றார்.

மேலும், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உயர்தர தொழில்முறை பயிற்சிகளைப் பெற்றுள்ள அவர், அங்கு தனது உயர்தர டான் (Higher Dan) டிப்ளோமா தேர்வுகளிலும் சித்திபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 இன் நடுவர் குழுவில் அன்ரோ டினேஷ் இடம்பெற்றுள்ளமை, அவரது சர்வதேச கராத்தேப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், கராத்தேக் கலையின் வளர்ச்சிக்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அவர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பான பங்களிப்புக்கும், அனுபவத்திற்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.