நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், கதையின் நாயகன் என ரசிகர்களிடத்தில் பன்முக திறமைகளுடன் அறிமுகமாகி பிரபலமான நடிகர் சதீஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ பத்து நாள் ராஜா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வாடா போடா..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து நாள் ராஜா’ திரைப்படத்தில் சதீஷ், ஆதி சாய் குமார், சரண்யா ராமச்சந்திரன், கருடா ராம், ‘ஆடுகளம்’ நரேன், ‘பருத்திவீரன்’ சரவணன், ‘ஆதித்யா’ கதிர், அதியா பிரசாத், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மனோஜ் பரஹாம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் நிலையில் இதில் இடம்பெற்ற ‘வாடா போடான்னு பேசுற… என்ன வாய்க்கு வந்தத திட்டுறா.. பொறுக்கி பயலே என்கிறா.. என்ன பொறம்போக்குன்னு வையிரா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் ‘சீர்காழி: சிற்பி எழுத, பின்னணி பாடகர் சிபி ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். துள்ளல் இசையில் அமைந்த இந்தப் பாடலும், பாடலுக்கான காணொளியில் இடம் பிடித்த நடிகர் ஆதி சாய்குமார் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.