செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

1 minutes read

தமிழ் சினிமாவின் நவீன வடிவிலான சினிமா சந்தையில் மதிப்புமிக்க நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சொக்க வச்சாளே..’ எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தில் ஜீவா-  ரஜிஷா விஜயன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.‌

எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற முதல் பாடல் வெளியாகிய பெரும் வரவேற்பை பற்றி நிலையில்… ‘அவ கண்ணாலே என்ன சொக்க வச்சாளே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பின்னணி பாடகர்கள் ஹரிச்சரண்- நாராயணன் ரவிசங்கர் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான காதலும்.. அது தொடர்பான உணர்வும்  கிராமிய மணம் மாறாமல் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இந்த பாடலும்… பாடலுக்கான மெட்டும்… பாடல் வரிகளும் …குரலும்… ரசிகர்களை வசுகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.