செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது | கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது | கோழிப் பண்ணையாளர்கள் சங்கம்!

1 minutes read

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக் காணப்படுவதால் விலைகள் குறைவடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு உற்பத்தி காணப்படுவதுடன், தேவையான எந்தவொரு அளவையும் சந்தைக்கு விநியோகிக்கும் இயலுமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதனை ஈடுசெய்யப் போதியளவு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது எனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அஜித் குணசேகர, முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையே விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதால், அதற்குப் பதிலாக அரிசி பயன்படுத்தப்படுவதாகவும், இந்த மாற்றத்தினால் முட்டை உற்பத்தி ஓரளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கோழிப் பண்ணைகளை அண்மித்துப் பரவி வரும் சில வைரஸ் நோய்களும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடையத் தாக்கம் செலுத்தியுள்ளன.

தற்போது ஒரு முட்டை 39 முதல் 40 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நாட்களில் சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலுக்கு ஏற்பவே முட்டையின் விலை தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார். குறுகிய காலத்திற்குள் முட்டை உற்பத்தியைக் கணிசமாக அதிகரிப்பது கடினமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் தெரிவிக்கையில்:

தீவுகள் ஆராயுங்கள்

“பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என நான் நினைக்கவில்லை. நாட்டின் தேவைக்குப் போதுமான கோழி இறைச்சி உள்ளது. டிசம்பர் மாதத்தில் கேள்வி அதிகரித்தாலும், அதற்குப் போதுமான பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால் விலை பாரியளவில் உயராது.

ஆனால், முட்டைக்கான கேள்வி பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சோளத் தட்டுப்பாடு காரணமாக அதற்குப் பதிலாக அரிசி பயன்படுத்தப்படுவதால் உற்பத்தி சற்று குறைந்துள்ளது. அதேபோன்று, சில வைரஸ் நோய்கள் பரவியமையாலும் நவம்பர் மாத மழையுடனான காலநிலையாலும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது ஒரு முட்டை 39, 40 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. சந்தையின் கேள்விக்கு அமையவே விலை தீர்மானிக்கப்படும். குறுகிய காலத்தில் உற்பத்தியை அதிகரிப்பது சற்று கடினமானது. எனவே, எதிர்வரும் காலங்களிலும் கால்நடைத் தீவன மூலப்பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வர்த்தக அமைச்சர் இது குறித்துக் கலந்துரையாடி உரிய தீர்வை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.