2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் பரீட்சையுடன் தொடர்புடைய பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்துதல் மற்றும் மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள 3,519 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.