செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாடும் பாகிஸ்தான்

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாடும் பாகிஸ்தான்

1 minutes read

கத்தார் தேசத்தின் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதிபெற்றது.

இதற்கு முன்னோடியாக வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் ஏ அணி தகுதிபெற்றது.

 

பங்களாதேஷ் ஏ அணி வீரர் ஷஹாதத் ஹொசெய்ன் அபார சதம் குவித்த போதிலும் அது இறுதியில் பயனற்றுப் போனது.

பாகிஸ்தான் ஏ அணியில் 3ஆம் இலக்கத்திலிருந்து 6ஆம் இலக்கம் வரையான துடுப்பாட்ட வீரர்கள் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தமது அணியை வெற்றி அடையச் செய்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

ஷஹாதத் ஹொசெய்ன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 103 ஓட்டங்களையும் மஹிதுல் இஸ்லாம் அன்கொன் 42 ஓட்டங்களையும் எஸ்.எம். மெஹெரோப் 28 ஓட்டங்களையும் கடை நிலை வீரர்கள் ரக்கிபுல் ஹசன் 10 ஓட்டங்களையும் ரிப்பொன் மொண்டொல் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

3ஆவது விக்கெட்டில் மஹிதுல் இஸ்லாம் அக்கோனுடன் 95 ஓட்டங்களைப் பகிர்ந்த ஸஹாதத் ஹொசெய்ன், 6ஆவது விக்கெட்டில் மெஹெரோபுடன் 52 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் மொண்டொலுடன் 40 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

பந்துவீச்சில் சுபியான் மோக்கிம் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹசன் நவாஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அலி ராஸா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஏ அணி 45.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஷாஸெய்ப் கான் 50 ஓட்டங்களையும் ஹசன் நவாஸ் 62 ஓட்டங்களையும் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அணித் தலைவர் அப்துல் சமாத் (44), பர்ஹான் யூசுப் (46 ஆ.இ.) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை சுலபமாக்கினர்.

பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டொல் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஹசன் நவாஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.