‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் – 2027 ஜனவரி மாதம் 14ஆம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதினை வென்ற ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
எளிய மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த ஃபீல் குட் என்டர்டெய்னர் திரைப்படத்தை டைலர் டர்டன் – கினோ ஃபீஸ்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.டி. எழில் மதி மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத் திரைப்படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்.. இத்திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கல் திருநாளன்று படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என தனித்துவமான படைப்புகளை வழங்கி இந்திய சினிமாவில் பாரிய அதிர்வை ஏற்படுத்திய படைப்பாளி தியாகராஜன் குமாரராஜா- ‘மகாராஜா’ படத்தின் மூலம் சர்வதேச அளவிற்கு பிரபலமான விஜய் சேதுபதி – ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதால்.. இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.