செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் மாவீரர் நாள்

பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் மாவீரர் நாள்

1 minutes read

பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் உலகத் தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில், 26.11.2026 அன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். மாவீரர்களின் தியாகங்களையும், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்கில் இந்நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று, போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுகள் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டன. தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பிரித்தானியாவில் நடைபெற்ற இந்நிகழ்வும் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்று நினைவுகளையும் தாயக உறவையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

உலகத் தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள வரலாற்று வளாகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றமை சிறப்பான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தமது மண்ணையும் மக்களையும் இலட்சியத்தையும் முன்னிறுத்தி உயிர்நீத்தவர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதும், அந்த வரலாற்றை எதிர்காலத் தலைமுறையிடம் கையளிப்பதும் இத்தகைய நினைவேந்தல்களின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது.

மாவீரர்களின் நினைவுகள் எல்லைகளைக் கடந்தும் தலைமுறைகளைக் கடந்தும் தொடரும் வரலாற்று அடையாளமாக நிலைத்திருப்பதை இந்நிகழ்வு மீண்டும் வெளிப்படுத்தியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.