துபாய் ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவி உயிர் இழந்தார் என அறிவிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே. விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதித்தனர்.
அனில் அம்பானிக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று செய்வாய் இரவு ஸ்ரீதேவியின் உடல் துபாயிலிருத்து 9.35 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது. அங்கிருந்து நேராக இறுதிச்சடங்குகள் நடக்கும் அந்தேரி பகுதியில் உள்ள லோகந்வாலா வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணியிலிருந்து 12.30 மணி வரை ஸ்ரீதேவியின் உடலுக்கு பிரமுகர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என போனி கபூர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப் பட் டுள்ளது.
இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பின்னர் சுமார் 2 மணியளவில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அவரது உடல் நாளை மாலை 3.30 மணியளவில் விலே பார்லே சேவா சமாஜ் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
