கண்டி மாவட்டத்தில் இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அங்கு கலவரம் மூண்டது. மோதல் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், கடந்த 6 ஆம் தேதி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 10 நாட்களுக்கு நெருக்கடி நிலை அமலில் இருக்கும் என்று ஜனாதிபதி சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இலங்கையில் தற்காலிகமாக 7 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டது. வன்முறையின் போது பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வெறுப்பூட்டும் கருத்துக்களை நீக்க முயற்சிப்பதாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை அரசு, பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.