செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பெண்கள், சிறுமிகளின் ஆபாசப் படங்களை விற்பனை செய்த இணையத்தளம்: 21, 25 வயது சகோதரர்கள் கைது!

பெண்கள், சிறுமிகளின் ஆபாசப் படங்களை விற்பனை செய்த இணையத்தளம்: 21, 25 வயது சகோதரர்கள் கைது!

1 minutes read

17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் தனிப்பட்ட ஆபாசப் புகைப்படங்களைத் திருடி இணையத்தில் விற்பனை செய்து வந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சகோதரர்கள் இருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

21 மற்றும் 25 வயதுடைய குறித்த இருவரும் வடக்கு பிரான்ஸ் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளக் கணக்குகளை சட்டவிரோதமாக ஊடுருவுதல் (Hacking), இணையவழியில் சிறுவர்களை ஏமாற்றி இணங்கவைத்தல் (Grooming) மற்றும் பழிவாங்கும் நோக்கில் பகிரப்படும் ஆபாசப் பதிவுகள் (Revenge Porn) போன்ற வழிகளில் திரட்டப்பட்ட பெண்களின் புகைப்படங்களை குறிப்பிட்டதொரு தளத்தில் தொகுப்புகளாக விற்பனை செய்து வந்துள்ளது. சிறார்கள் உட்பட சர்வதேச அளவில் 17,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சட்டவிரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க பொலிஸார் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பிட்காயின், எத்தேரியம், லைட்காயின் மற்றும் USDT உள்ளிட்ட சுமார் 700,000 யூரோ (782,530 அமெரிக்க டொலர்) பெறுமதியான கிரிப்டோகரன்சி டிஜிட்டல் சொத்துகளை பிரான்ஸ் புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணினதும் பெயர் மற்றும் தனிப்பட்ட அடையாள விபரங்களை வழங்குமாறு இந்த தளத்தைப் பயன்படுத்தியவர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு தகவல்களை வழங்கியவர்களுக்கு கிரிப்டோகரன்சி சன்மானமாக வழங்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இணையதளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருப்பின், உடனடியாக பிரான்ஸ் பொலிஸின் இணைய குற்றத்தடுப்புப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு, அந்நாட்டு அரச தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.