4
1947ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாளில் தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு, நாளிதழாகவும், பின்னர் வாரஇதழாகவும் வெளிவந்த ‘சுதந்திரன்’, 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்களை அடுத்து எழுந்த சூழ்நிலைகளால் இடைநிறுத்தப்பட்டது.
இவ் இதழ் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘புதிய சுதந்திரன்’ என்ற பெயரில் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் நேற்று ‘புதிய சுதந்திரன்’ வாரஇதழின் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
