செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரவின் புதிய சட்டம் | இலங்கை

அமைச்சர் மங்கள சமரவீரவின் புதிய சட்டம் | இலங்கை

0 minutes read

இதுவரை காலமும் அமுலில் இருந்த சிக்கலான தீர்வுக் கொள்கைக்குப் பதிலாக, எளிமையான சீரான தீர்வுக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் வரையப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அமைச்சர் புதிய சட்டம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் வருமான மட்டம் உயர்ந்த போதிலும் அதற்கு ஏற்ற விதத்தில் வருமான வரி அதிகரிக்கவில்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் கீழான மட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கும், கல்வி, சுகாதாரம் முதலான துறைகளின் முன்னெற்றத்திற்கும் வரி வருமானம் அத்தியாவசியமானது.

எனவே வரி செலுத்த வேண்டிய சகலரும் வரி செலுத்துவதை சமூக கடமையாகக் கருத வேண்டுமென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக் கொண்டார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.