செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் இலங்கை ஜனாதிபதி!

பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் இலங்கை ஜனாதிபதி!

0 minutes read

பாகிஸ்தானின் குடியரசு தின விழா  முற்பகல் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றினார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வருகையுடன் விழா நடவடிக்கைகள் ஆரம்பமானதுடன், இரண்டு நாடுகளினதும் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அதிதிகள் இராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் விமானப்படையினரின் சாகசங்களை பார்வையிட்டனர். மூன்று மணிநேரமாக இடம்பெற்ற இந்த குடியரசு தின விழாவில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் விழாவில் உரையாற்றினார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவைக் எடுத்துக்காட்டும் வகையில் தனது உத்தியோகபூர்வ அழைப்பையேற்று பாகிஸ்தானின் குடியரசு தின விழாவில் பங்குபற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு பாகிஸ்தானிய ஜனாதிபதி தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.