பிரபல தொகுப்பாளினியான டிடி என்ற திவ்யதர்ஷினியை அறியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு அவர் புகழ்பெற்றுள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சியொன்றில் அவ்வப்போது ஏதாவது முக்கிய நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வௌியான பவர் பாண்டி படத்தில் நடித்திருந்தார்.
நடிகைகள் என்றாலே அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகு சாதனா பொருட்கள் வாங்குவது, புது உடைகள் வாங்குவது என அதிக அளவில் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் , டிடி தனது இன்ஸ்டா கிராமில் புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பர்தா உடையணிந்து காணப்பட்டார். மேலும் , அதில் ஷாப்பிங் பண்றோம் , பின்றோம் என பதிவிட்டுள்ளார். ஷாப்பிங் செய்யும் போது ரசிகர்கள் தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு பர்தா உடையணிந்து சென்றுள்ளார்.