செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரசாயன தொழிற்சாலை வெடிப்பு 47 பேர் பலி

இரசாயன தொழிற்சாலை வெடிப்பு 47 பேர் பலி

1 minutes read

சீனாவின் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்ததுடன், 640 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள யான்செங் எனும் இடத்தில் அமைந்துள்ள உரம் தயாரிக்கும் இரசாயன தொழிற்சாலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 640 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

58 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வெடிப்புச் சம்பவத்தின் போது பரவிய தீ காரணமாக கட்டடங்கள் சிலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்ற போதும், இன்று அதிகாலை 3 மணியளவிலேயே தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More