காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடாத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரின் அலுவலகமும் இராணுவ புலனாய்வு தலைமையகமும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் 7 பேர் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வடக்காக உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் 7 பேர் காயமடைந்ததுக்குப் பதிலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தன. அதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.