செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் சஜித்? அமைச்சர் தகவல்

சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் சஜித்? அமைச்சர் தகவல்

0 minutes read

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றதாகவும் இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அந்த சந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் கூறியதாக கொழும்பை தளமாக கொண்டியங்கும் இணையமொன்று தெரிவித்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.