செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian செய்முறை

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian செய்முறை

1 minutes read

தேவையான பொருள்கள் .

 

மீல் மேக்கர்   –  1 கப்
கார்ன்  மாவு     –  3  ஸ்பூன்
அரிசி மாவு  – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு  பேஸ்ட் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள்  – 2 ஸ்பூன்
தயிர்  – 2 ஸ்பூன்
நறுக்கிய குடை மிளகாய்   –  அரை
நறுக்கிய  வெங்காயம்    – 1
பொடியாக நறுக்கிய இஞ்சி    1  ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு    1 ஸ்பூன்
சோயா சாஸ்    1  ஸ்பூன்
சில்லி சாஸ்    1  ஸ்பூன்
மிளகுத் தூள்    2  ஸ்பூன்
எண்ணெய்    – தேவையான அளவு

உப்பு     – தேவையான அளவு

 

செய்முறை:

 

முதலில் வெந்நீரில் மீல் மேக்கரை போட்டு   உப்புச் சேர்த்து  5 நிமிடங்கள்  கொதிக்க விடவும்.

பின்  சாதரண  தண்ணீரில் நன்கு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில்   பிழிந்த  மீல் மேக்கர்   இதனுடன் 2 ஸ்பூன் சோள மாவு அரிசி மாவு சிறிது உப்பு மற்றும் அரை   ஸ்பூன் மிளகுத் தூள்   1 ஸ்பூன்  மிளகாய் தூள்  இஞ்சி பூண்டு பேஸ்ட் தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ்பண்ணி 15 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பின் 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சோளமாவு கலந்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

பின் கடாயில் 2 ஸ்பூன்  எண்ணெயை ஊற்றி, முதலில் இஞ்சி, பூண்டு சேர்த்து, வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி  அதனுடன்  குடை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி

அதில்  சில்லி, சோயா சாஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து   அதில் பொரித்த மீல் மேக்கரை  சேர்த்து  2 நிமிடம் வதக்கி பொரித்த  மீல் மேக்கரை சேர்த்து 2  நிமிடம் வதக்கி அதனுடன்  தண்ணீரில்  கரைத்த  சோள மாவைக்  ஊற்றி கலந்து விடவும்.

ஊற்றிய தண்ணீர் கெட்டியாக மாறி, பளபளப்பாக மாறும். அப்பொழுது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.

கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

சுவையான மீல்மேக்கர் மஞ்சூரியன் ரெடி.

 

நன்றி : தமிழ்க்குறிஞ்சி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.