செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சம்பந்தனை தான் ஏமாற்றினார் விக்கி; மக்களையல்ல; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதில்!

சம்பந்தனை தான் ஏமாற்றினார் விக்கி; மக்களையல்ல; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதில்!

1 minutes read

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

நேற்று(வியாழக்கிழமை) வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாகஅறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப்போல தமிழ் மக்களை ஏமாற்ற பெரிதும் பொருத்தமானவர் என நம்பிய சம்பந்தன் விக்னேஸவரனிடம் ஏமாந்தது உண்மையே.

ஆனால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. சம்பந்தன் எதிர்பார்த்தது போல

* தேர்தல்களில் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அவர் கைவிடவில்லை

* ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை

* இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை

* பதவி, பணம், சுகபோகங்களுக்காக விலைபோகவில்லை

* சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணை எடுப்பதற்கு துணை நிற்கவில்லை

* கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக வெளிநாட்டில் நிதி சேகரிக்கப் போகவில்லை

* இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத் துணை போகவில்லை என்பதனால் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே.

விக்னேஸ்வரன் தான் சொன்னதுக்கு மாறாக தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவில்லை. பேரவை வேறு. தமிழ்மக்கள் கூட்டணி வேறு. இக் கட்சி கூட தமிழ்மக்களின் வேண்டுகோளைப் புறந்தள்ளமுடியாது உருவாக்கப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இக்கட்சி தோன்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

மேலும் நல்லாடசியிடம் சம்பந்தன் ஏமாறவில்லை எனச் சுமந்திரன் சொல்வது உண்மையானால் ஏமாந்துவிட்டோம் என தலைவர் உட்பட அவரது கட்சியினர் சொன்னது பொய்யா? அவரது கட்சியினர் சொன்னது பொய்யானால் சுமந்திரனும் சம்பந்தனும் எமது மக்களை மட்டுமல்ல அவரது கட்சியினரையும் ஏமாற்றியது உண்மையாகும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.