புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் காதல் இப்படியும் இருக்கலாம் | கவிதை | கயல்விழி மணிவாசன்

காதல் இப்படியும் இருக்கலாம் | கவிதை | கயல்விழி மணிவாசன்

0 minutes read

 

விழி நோக்கா
அவனின்
விழி நோக்க
இந்த கயல் விழி
இதயம்
வழி பார்க்க

நல்ல நேரம் பிறப்பதாய்
குடுகுடுப்பைக் காரனும்

நடக்குமா என்று
நினைக்கையில்
பல்லியும் அதன் பாஷையில்
ஆம் சொல்ல

திறந்த கண்களுக்குள்
கலர் கலர் கனவுகள்
வட்டமிட

தூரத்தே தெரிந்த
வானம் அருகில்
வந்து என்னையும்
அணைத்துக்கொள்ள

அந்த
நட்சத்திரக்கூட்டத்தில்
நானும்
மின்னப்போவதாய்
தோன்றிய எண்ணத்திற்கு
முற்றுப்புள்ளி
வைத்து அப்பாத்தா
சொன்னாள்

அந்த
கிருஷ்ணா பய வந்தா
வீட்டுள்ளுக்கு கூப்பிடாத
அவன் கீழ் ஜாதி.

குனிந்த தலை நிமிராது
இன்றும்
குப்பையை சுமந்து செல்கிறான்
அவன்!

 

நன்றி : கயல்விழி மணிவாசன் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.