121
- வாய்ப்பன் செய்வது எப்படி?
உங்கள் சுவையை தூண்டும் வாய்ப்பன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வாய்ப்பன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
- கோதுமை மாவு – 2 கப்
- நன்கு பழுத்த வாழைப்பழம் – 2 (பெரியது)
- சீனி – அரை கப்
- பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
- எண்ணெய் – பொரிப்பதற்கு
- உப்பு
உணவு செய்முறை : வாய்ப்பன்
- Step 1.முதலில் கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவேண்டும். பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- Step 2.மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவேண்டும்.
- Step 3.பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும். இப்பொழுது வாணலியில் எண்ணெயைக் கொதிக்கவிடவும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- Step 4.பின்னர் அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாய்ப்பன் தயார்.