உங்கள் சுவையை தூண்டும் கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கோஸ் கடலைப் பருப்புப் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
முட்டை கோஸ் கால் கிலோ,
கடலைப் பருப்பு கால் கப்,
பெரிய வெங்காயம் 2,
தக்காளி 3,
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கு,
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிது,
கடுகு 1 டீஸ்பூன்,
சோம்பு அரை டீஸ்பூன்.
உணவு செய்முறை : கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்
Step 1.கோஸ், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை பதமாக வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள்.
Step 2.எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
Step 3.பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அதனுடன் கோஸ், உப்பைச் சேர்த்து, மிதமான தீயில், கோஸ் வேகும் வரைக் கிளறி, கடைசியில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
நன்றி : அறுசுவை சமையல்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW