உங்கள் சுவையை தூண்டும் டெவில்ட் சிக்கன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான டெவில்ட் சிக்கன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
சிக்கன் – அரைக் கிலோ
குடை மிளகாய் – 2 (சதுரமாக நறுக்கியது)
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
தக்காளி – 2
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு மேசைக்கரண்டி
தக்காளி கெச்சப் – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் – அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உணவு செய்முறை : டெவில்ட் சிக்கன்
Step 1.முதலில் சிக்கன் துண்டுகளுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
Step 3.பிறகு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் பாதி வேகும் வரை பொரித்தெடுக்கவேண்டும். பிறகு பொரித்த சிக்கன் துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் வடிய வைக்கவும்.
Step 4.பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்னெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.