உங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
பாசிப்பருப்பு…………1கப்
தேங்காய்…………….2 மேசைக்கரண்டி
திராட்சை…….15
தேங்காய்…………….2 மேசைக்கரண்டி
ஏலக்காய்……..6
முந்திரி…………….10
பால்……………1 டம்ளர்
வெல்லம்………….11/4 கப்
கேரட்……….1 மேசைக்கரண்டி
உணவு செய்முறை : பாசிப்பருப்பு பாயாசம்
Step 1.முதலில் பாசிப்பருப்பை குக்கரில் 2 கப் நீர் விட்டு வேகவைக்கவும். பின்பு வெல்லத்தை துருவி, சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும்.தேங்காய், பாதி முந்திரி, தோல்நீக்கிய ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
Step 2.மீதி முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்தெடுக்கவும்.பின்னர் அதே வாணலியில் கேரட்டையும் போட்டு வதக்கி எடுக்கவும்.அகலமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.
Step 3.பின்பு அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.வறுத்த முந்திரி, திராட்சை, கேரட் போடவும்.கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.பின்பு பரிமாறவும்.
நன்றி : அறுசுவை சமையல்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW