எய்ட்ஸ் இல்லன்னு டாக்டர் சான்றிதழ் : தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களிடம் கேட்கும் நடிகை!எய்ட்ஸ் இல்லன்னு டாக்டர் சான்றிதழ் : தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களிடம் கேட்கும் நடிகை!

உடன் நடிக்கும் ஹீரோவிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘ஜாக்பாட், ‘ராகினி, ‘எம்எம்எஸ் 2, ‘ஜிசிம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழிலும் ‘வடகறி’ என்ற படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். படங்களில் நடிக்கும்போது தயாரிப்பாளர்களிடம் இவர் ரகசியமாக கண்டிஷன் போட்டு நடிப்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கு முன்பு உடன் நடிக்கும் ஹீரோவிடமிருந்து எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்ததற்கான டாக்டர் சான்றிதழ் கண்டிப்பாக தரவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.

படத்தில் நடிக்கும்போது ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் வரும். எனவேதான் இந்த சான்றிதழை சன்னி கேட்பதாக அவரது தரப்பில் கூறுகின்றனர். ‘ஜிசிம் 2 படத்தில் அவர் நடித்தபோது அப்படத்தில் நடித்த ரன்தீப் ஹடா, அருனோதய் சிங் ஆகியோரிடமிருந்து இதுபோன்ற சான்றிதழ் பெற்ற பிறகே நடிக்க சம்மதித்துள்ளார்.

ஆசிரியர்