காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி, ஒருவர் உயிரிழந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நம்பி திரைப்படங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ. 200 கோடியின் கதி என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
தற்போது சல்மான் கான், தனது சொந்தத் தயாரிப்பான பஜ்ரங்கி பைஜாண் மட்டுமின்றி பிரேம் ரத்தன் தன் பாயோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தபாங்-3 உள்பட மேலும் பல திரைப்படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தத் திரைப்படங்களில் சுமார் ரூ. 200 கோடி மூதலீடு செய்யப்பட்டுள்ளது. சல்மான் கான் சிறைக்குச் சென்றால், மேற்கண்ட திரைப்படங்கள் வெளியாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான பீவி ஹோ தோ ஐசி என்ற ஹிந்தி திரைப்படத்தில், சல்மான் கான் அறிமுகமானார். அவருடைய இரண்டாவது திரைப்படமான மைனே பியார் கியா (1989) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தின்மூலம், சிறந்த புதுமுக நடிகருக்கான “ஃபிலிம்பேர்’ விருதைப் பெற்றார்.
தபாங் திரைப்படத்தில் நடித்ததற்காக, “ஸ்கிரீன்’ பத்திரிகையின் 2011-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். தஸ் கா தம், பிக் பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
0