கோலிவுட்டில் சேலை உடுத்தும் நடிகைகள் மிக குறைவு. சில வருடங்களுக்கு முன் முன்னணி ஹீரோயினாக இருந்த சிம்ரன் பெரும்பாலும் சேலை உடுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தவறாமல் சேலை உடுத்துவார். அதன்பிறகு வந்த நடிகைகள் மாடர்ன் உடையிலேயே தோற்றம் அளிக்கின்றனர். கோலிவுட்டிலேயே இப்படியென்றால் பாலிவுட்டில் கேட்க வேண்டுமா? ஆனாலும் எப்போதாவது ஒருமுறை தீபிகா படுகோன் சேலை உடுத்தி வருவதை பேஷனாக வைத்திருக்கிறார்.
மற்றபடி மாடர்ன் டிரஸ்தான் பிரதானமாக அணிகிறார். சேலை உடுத்தும் நடிகை என்றால் வித்யாபாலன் மட்டுமே நினைவுக்கு வருவார். பாரம்பரியம், கலாச்சாரம் என்று பார்த்து உடை கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கும் வித்யாவுக்கு தற்போது பெரிய சம்பாத்தியத்தை தேடித் தந்திருக்கிறது. சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்கள் பிராண்ட் சேலைகளுக்கு மாடலாக இருக்க வித்யாவிடம் பேசி வருகிறது. ஒரு வருடத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதற்கு சம்பளமாக ரூ.13 கோடி தர தயாராக இருக்கிறதாம்.