செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை சன்னி லியோன் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்நடிகை சன்னி லியோன் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்

நடிகை சன்னி லியோன் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்நடிகை சன்னி லியோன் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்

1 minutes read

பிபிசி  வெளியிட்டு உள்ள  100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை சன்னி லியோனும்  இடம் பெற்று உள்ளார்.

கனடாவில் ஆபாச  படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

2015 ல் இந்தியாவில் மிக அதிகமாக கூகுளில் தேடபட்டவர்கள் பட்டியலில்  ஆபாச நடிகை சன்னி லியோன் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.இது போல் 2014ம் ஆண்டிற்கான தேடபட்டவர்கள் பட்டியலில்  சன்னிலியோன் தான் முதல் இடத்தில் இருந்தார்.2013 ஆம் ஆண்டும் இவரே முதல் இடத்தில் இருந்தார்.

தற்போது பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள 100 செல்வாக்குள்ள பெண்மணிகள் பட்டியலில் சன்னி லியோனும் இடம்பெற்று உள்ளார்.

செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலை  பிபிசி 4 வது வருடமாக வெளியிடுகிறது.இந்த பட்டியலில் பெண் தொழில் அதிபர்கள், என்ஜினீயர், விளையாட்டு வீராங்கனைகள், பேஷன் அழகைகள்  மற்றும் கலைஞர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.

இந்த் பட்டியலில் சன்னி லியோன் தவிர கம்யூட்டர் என்ஜினியர் மாணவி கவுரி சந்திராகர் (சாங்லி) மல்லிகா ஸ்ரீனிவாசன்(சென்னை) நேகா சிங் ( மும்பை) சாலு மராடா  திம்மக்கா( கர்நாடகா) ஆகிய  இந்திய பெண்களும் இடம் பெற்று உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.