செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஸ்ரீதேவி மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்ஸ்ரீதேவி மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்

ஸ்ரீதேவி மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்ஸ்ரீதேவி மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்

1 minutes read

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பார்க்க தனது தாய் போன்றே மிகவும் அழகாக உள்ளார்.  தங்களின் படங்களில் நடிக்க வைக்க தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் முயன்று தோல்வி அடைந்தனர். இந்நிலையில் ஜான்வி பாலிவுட் படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க உள்ளார்.

வருண் தவான் அடுத்த ஆண்டு நடிக்க உள்ள ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஜான்வி. ஏகப் போட்டி உள்ள பாலிவுட்டில் நுழையும் அவர் அமெரிக்காவில் முறைப்படி நடிப்பு பயின்று வருகிறார்.

ஜான்வி முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்து வருகிறார்.  சமீபத்தில் அவருடன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி தீயாக பரவியது.

பாலிவுட்டில் நிலைக்க வேண்டும் என்றால் நல்ல பெயர் இருக்க வேண்டும். இதில் பாலிவுட்டில் நுழையும் முன்பே இப்படி லிப் டூ லிப்பா என்று ஸ்ரீதேவி தனது மகள் மீது கோபப்பட்டாராம்.

ஷிகர் பஹாரியாவை இனி பார்த்து பேசக் கூடாது. இனி உனக்கு எந்த ஆண் நண்பர்களும் இருக்கவே கூடாது. எது செய்தாலும் என்னை கேட்டுத் தான் செய்ய வேண்டும் என ஜான்விக்கு ஸ்ரீதேவி கன்டிஷன் போட்டார்.

ஆனால் தற்போது அவர்கள்அது காதலுக்கு ஸ்ரீதேவியும், போனிகபூரும்  சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று குடும்பத்துடன் ஷாருகான் – அலியாபட் நடித்த ’டியர் ஜிந்தகி’ படத்தை பார்க்க சென்று உள்ளனர்.அப்போது ஜான்வியின் காதலரும் உடன் சென்று உள்ளார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.