செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஆஸ்கார் விருது பட்டியலில்ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நடிகர்ஆஸ்கார் விருது பட்டியலில்ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நடிகர்

ஆஸ்கார் விருது பட்டியலில்ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நடிகர்ஆஸ்கார் விருது பட்டியலில்ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நடிகர்

1 minutes read

சினிமா வரலாற்றில் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்த நடிகர் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

சினிமா பட உலகின் மிக உயரிய ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் நடைபெறுகிறது. அதில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தேர்வுக்கான விருது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க நடிகர் கெல்லி மேண்டில் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இவர் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தவர். ஆணாக பிறந்த இவர் ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்து நடித்து வருகிறார்.

இவர் ஆண் மற்றும் பெண் என இருபாலின விருது பிரிவில் இடம் பெற்றுள்ளார். எனவே இவரது பெயர் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இவர் ‘ஜிஞ்சர்’ என்ற படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறி விபசார தொழிலில் ஈடுபடுபவராக நடித்துள்ளார். அது நகைச்சுவையுடன் கூடிய படமாகும். 89-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா வருகிற ஜனவரி 24-ந்தேதி நடக்கிறது. அப்போது இவருக்கு விருது கிடைக்குமா என தெரியவரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.