செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா `அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாகும் `ராட்சசன்’ நடிகை!

`அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாகும் `ராட்சசன்’ நடிகை!

1 minutes read

`பொல்லாதவன்’, `ஆடுகளம்’, `வட சென்னை’ படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக `அசுரன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.

அசுரன்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியமைத்தாலே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிடும். இவர்களது கூட்டணியில் நான்காவது முறையா தயாராகி வரும் `அசுரன்’, வரும் அக்டோபர் 3-ம் தேதி வெளியாகிறது. முதல் இரண்டு ஷெட்யூல்களும் கோவில்பட்டியில் நடந்துமுடிந்த நிலையில், படத்தின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட ஷூட்டிங், தற்போது சென்னையில் நடந்துவருகிறது. ஒவ்வொரு போர்ஷனும் முடிய முடிய போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் சூட்டோடு சூடாக முடித்துவிட்டது, படக்குழு. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் எடிட்டிங்கும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும்.

அம்மு அபிராமி
அம்மு அபிராமி
படத்தின் சிங்கிள் டிராக்கும் விரைவில் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். தவிர, மஞ்சு வாரியரோடு சேர்ந்து தனுஷ் இருப்பதுபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்தது. படத்தில் தனுஷின் மகனாக கருணாஸின் மகன் நடிக்கிறார். தனுஷ், அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. அப்பா தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துவந்த நிலையில், மகன் தனுஷுக்கு அம்மு அபிராமி நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த `ராட்சசன்’ படத்தில் அம்முவாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றவர், அபிராமி. இதனாலே படத்துக்குப் பிறகு அவரது பெயர் `அம்மு’ அபிராமி என மாறியது.

நன்றி: விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.