May 28, 2023 5:06 pm

பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டை பார்த்து அழுதேன்;  நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நான் இலங்கை வந்திருந்த போது பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்த்தேன். என்னால் அழுகையை தவிர்க்க முடியவில்லை என தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பரந்த தமிழகம் என்றே கூறவேண்டும். என் தொப்புள்கொடி உறவுகள் அங்குள்ளனர். அண்மையில் இலங்கைக்கு வந்து 4 நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தேன்.

வவுனியா, கிளிநொச்சி, வல்வெட்டித்துறை என பல இடங்களை பார்வையிட்டேன். முக்கியமாக அதிமேதகு பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்றேன். எவ்வளவு பெரிய மேதை வாழ்ந்த இடம் அது. என்னால் அழுகையை தவிர்க்க முடியவில்லை.

இலங்கை வந்தது நான் என் வீட்டிற்கு வந்து போனது போன்றது. இலங்கை தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். மறுபடியும் கண்டிப்பாக வரவேண்டும். ஈழம் என்னை நெகழவைத்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்