இன்னும் மூன்று நாட்கள்தான்; ரசிகர்களே காத்திருக்கவும் – சோனியா அகர்வால்

சண்டிகரைச் சேர்ந்த சோனியா அகர்வால் காதல்கொண்டேன், கோவில், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற தமிழ்ப்படங்களில் நடித்தவர்.

தெலுங்குப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2006- ம் ஆண்டு டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்தார்.திருமணத்துக்கு பிறகு சோனியா அகர்வால் சினிமாவில் நடிக்கவில்லை. 2010- ம் ஆண்டு செல்வராகவன்- சோனியா அகர்வால் ஜோடி பிரிந்தது.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய சோனியா அகர்வால் வானம் என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார். இந்த நிலையில்,ஜூலை 22- ந் தேதி ட்விட்டரில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தாலி கட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இன்னும் மூன்று நாட்கள்தான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ரசிகர்களே காத்திருக்கவும் என்றும்தெரிவித்திருந்தார். நேற்று வெளியிட்ட மற்றோரு வீடியோவில் இன்னும் 2 நாட்கள்தான் என்று கூறியிருந்தார்.

இதனால், சோனியா அகர்வால்இரண்டாவதாக யாரையாவது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கலாம். அது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்