Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர்

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர்

1 minutes read

புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜெ.எம்.பஷீர் வீடியோக்களாக மாற்றியுள்ளார்.எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர்தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ.எம்.பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர்.

இந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார். 

ஜெ.எம்.பஷீர்

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வீடியோக்கள் உருவாக்கும் பணியை துவங்கிய இவர், இதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.. இத்தனைக்கும் காரணம் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர் மீது கொண்ட தீராத காதல் என்கிறார் ஜெ.எம்.பஷீர்.

நடிகர் ஜெ.எம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார்.

மேலும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் பசும்பொன் தேவர் வேடத்தில் பஷீர் நடித்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More