வைகைப்புயலின் பிறந்தநாள் | பத்து படங்கள் பத்து சுவை தகவல்கள்

வடிவேலுனா சும்மாவா...? சொன்னதை செய்து காட்டி எதிரிகளை வாயடைக்க செய்த வைகை  புயல்!

தமிழ் சினிமாவில் எப்போதும் வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே சின்ன குழந்தைகள் முதல் பல்லுப் போன பெரியவர்கள் வரை சிரிக்காத ஆளே இருக்க முடியாது.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

1988ம் ஆண்டு வந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வடிவேலு. அதன் பிறகு 1990ம் ஆண்டு இவரது மார்க்கெட் சூடுபிடிக்க ஆரம்பித்தது. என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், தேவர் மகன், தெய்வ வாக்கு என்று இப்படியே ஆரம்பித்தது.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

காலம் மாறிப் போச்சு, வெற்றி கொடி கட்டு, தவசி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, காத்தவராயன் ஆகிய படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது பெற்றுள்ளார்.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

சந்திரமுகி மற்றும் இம்சை அரசன் 23ம் புலிகேசி ஆகிய படங்களுக்கு சிறந்த காமெடியனுக்கான பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். மேலும், ஆதவன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

மருதமலை படத்திற்காக சிறந்த காமெடியனுக்கான விஜய் விருது பெற்றுள்ளார். மேலும், ஆதவன், நகரம் மற்றும் காவலன் ஆகிய படங்களின் சிறந்த காமெடியனுக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

காமெடி நடிப்பைத் தவிர்த்து இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன் மற்றும் எலி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். காமெடியன், ஹீரோவைத் தொடர்ந்து சிறந்த பின்னணிப் பாடகராகவும் உள்ளார்.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

1990ம் ஆண்டு தொடங்கிய இன்று வரை கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் ஹீரோவுக்கு அடுத்த படியாக அதிக படங்களில் வலம் வந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதாவது வருடத்திற்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வந்தார்.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

தொடக்க காலத்தில் கறுப்பு நாகேஷ் என்ற அடையாளத்துடன் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, பின் காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும், விதவிதமான கெட்டப்புகளில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. இவரைப் போன்று ஒரு படத்திற்கும், அடுத்த படத்திற்கும் தன்னை முழுமையாக வேறுபடுத்திக் காட்டியவர் வடிவேலு.

வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள்

காமெடி நடிப்பிலும் மட்டுமல்ல பெண் வேடத்திலும் கச்சிதமான தனக்கென ரோலை முழுமையாக்கிக் கொடுப்பவர். கிரி, வின்னர், மருதமலை போன்ற படங்கள் இவருடைய காமெடிக்காக உருவாக்கப்பட்ட படங்களாகவே காட்சியமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்