Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் உலக நாயகனை இயக்கும் வெற்றிமாறன்

உலக நாயகனை இயக்கும் வெற்றிமாறன்

1 minutes read

தமிழ் திரை உலகில் வெற்றி இயக்குனராகவும், தனித்துவமிக்க இயக்குனராகவும் வலம் வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக ‘உலகநாயகன்’ கமலஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பிறகு உலகநாயகன் கமலஹாசன் அரசியலுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்துவிட்டு, முழுமூச்சுடன் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘இந்தியன் 2 ‘ படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருவதால் அப்படத்தின் படத்திற்கான கால்ஷீட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க விரும்பினார்.

ஆனால் அதற்கும் சில இடையூறுகள் இருப்பதால் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம் 2’  படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம் 2’வில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இப்படத்திற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘அசுரன்’ படத்தின் அசுரத்தனமான வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய படத்தில் நடிக்க கமலஹாசன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

பிரபலமான நாவல் ஒன்றை மையமாகக்கொண்டு தயாராகும் இந்தப் படத்தை தமிழ் திரை உலகில் பிரபலமான நிதி உதவி செய்பவரும், தயாரிப்பாளருமான அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன்- உலகநாயகன் கமலஹாசன் கூட்டணி அமையவிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரி, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More