Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

ஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

1 minutes read

இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் மேலும் ஒரு இளம் நடிகை இணைந்திருக்கிறார்.

ஆண்ட்ரியா படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

நமிதா கிருஷ்ணமூர்த்தி

கடந்த டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் மிஷ்கின். இதில் புதிதாக இளம் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நமிதா கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் வெளிவந்த தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More