Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பூதமாக மாறிய பிரபுதேவா… வைரலாகும் புகைப்படம்!

பூதமாக மாறிய பிரபுதேவா… வைரலாகும் புகைப்படம்!

1 minutes read

நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமையுடன் இருக்கும் பிரபுதேவா வித்தியாசமான கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். பொய்க்கால் குதிரை என்ற படத்தில் ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். ஒரு நிஜ கால் மற்றும் ஒரு செயற்கை காலுடன் இருக்கும் பிரபுதேவாவின் தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் `மை டியர் பூதம்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் பூதமாக நடிக்கிறார். பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

படத்தை ராகவன் இயக்குகிறார். இதில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பிரபுதேவா நடித்த பொன் மாணிக்கவேல் படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராக இருந்த தேள் படம் சில பிரச்சினைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. யங் மங் சங்',பஹிரா’ மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More