செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சினிமாவில் நடிக்கிறாரா விஜயகாந்த்?

சினிமாவில் நடிக்கிறாரா விஜயகாந்த்?

0 minutes read

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளதாகவும் இதற்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என பிரேமலதா கூறியுள்ளார்.

விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து வியந்தேன். தவறான செய்தி அது. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார்.

ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.